×

ஆந்திர வனப்பகுதியில் வெட்டிய மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்: பொதுமக்கள் ஆச்சரியம்

திருமலை: ஆந்திர மாநில வனப்பகுதியில் வெட்டுப்பட்ட மரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. இதைப்பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் போடுராஜுதுரு கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் அதிகளவு உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தை வெட்டியுள்ளனர். மரத்தை சிறிதளவு வெட்டியபோது திடீரென வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து தண்ணீர் வந்தது. தொடர்ந்து வெட்ட முயன்றபோது தண்ணீரின் வேகம் அதிகரித்து நிற்காமல் தொடர்ந்து அதிகளவு கொட்டியது. இதனால் மரத்தை வெட்டாமல் அவர்கள் திரும்பினர். இதுகுறித்து அவர்கள் தங்கள் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

இதையறிந்த ஏராளமானோர் அங்கு விரைந்து சென்றனர். அந்த தண்ணீரை சிலர் பிடித்து குடித்தனர். அந்த தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பதாக ஆச்சரியப்பட்டனர். இதையறிந்த சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சிலர் குடங்கள் மற்றும் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து சென்றனர். அந்த தண்ணீர் மழைநீர்போல் சுத்தமாகவும், குடிப்பதற்கு சுவையாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திர வனப்பகுதியில் வெட்டிய மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்: பொதுமக்கள் ஆச்சரியம் appeared first on Dinakaran.

Tags : Andhra forestland ,Tirumalai ,AP ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...